
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மேற்கொண்ட ஸ்மார்ட்டான யோசனைகள் குறித்த வீடியோவை அவரது பிறந்தநாளான இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது ஐசிசி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டேக்குடன் தெறிக்கவிட்டு வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்கு பின்பு தல தரிசனம் எப்போதும் கிடைக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாகி இருந்தனர். ஆனால் 2020 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தன்னுடைய ஸ்டைலில், இன்ஸ்டாவில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ரசிகர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மஞ்சள் ஜெர்சி மூலம் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விருந்து படைத்து வருகிறார் தோனி. தோனி தனியொரு வீரரை காட்டிலும் கேப்டன்சியில் அவர் மேற்கொண்ட சில தனித்துவ முடிவுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. அவர் போட்டியின்போது மைதானத்தில் எடுத்த சில சாதுர்யமான முடிவுகள் இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கியது மட்டுமல்லாமல் பல நாடுகளையும் அடேங்கப்பா என ஆச்சரியப்படுத்தியது.
வீடியோவை பார்க்க: https://twitter.com/ICC/status/1412592453417242625?s=20
இதனால் தோனியின் பிறந்தநாளில் அவரை கவுரவிக்கும் விதத்தில் ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "கேப்டன் கூல்" என வர்ணித்து வீடியோ வெளியிட்டிருக்கிறது. அதில் போட்டியின்போது அவர் எடுத்த சில அற்புதமான முடிவுககள் நினைவுகூரப்பட்டுள்ளது. 4.45 நிமிடம் இந்த வீடியோ ஓடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hAuZQU
via IFTTT
0 Comments
Thanks for reading