ஒலிம்பிக்கில் வருவதும், போவதுமாக இருக்கிறது சாஃப்ட்பால் விளையாட்டு. ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை இந்த விளையாட்டு செய்யப்போகிறது.
பேஸ்பால் போன்றே விளையாடப்படுவது இந்த சாஃப்ட்பால் விளையாட்டுப் போட்டி. ஆனால் சாஃப்ட்பால் விளையாட்டின் விதிமுறைகள் பேஸ்பால் விளையாட்டில் இருந்து பல வகைகளில் வேறுபடுகிறது. பந்தின் அளவு, மைதானத்தின் பரப்பு என பல வித்தியாசங்கள் இதில் உள்ளன. பேஸ்பால் விளையாட்டில் பந்தை பிட்சரை நோக்கி எறியும் நிலையில், சாஃப்ட்பால் விளையாட்டில் அன்டர் ஆர்ம் முறையில் வீசப்படும். பேஸ்பால் விளையாட்டில் பந்தின் அளவு 9 இன்ச் அளவு இருக்கும் நிலையில், சாஃப்ட்பால் விளையாட்டில் 11 முதல் 12 இன்ச் வரை இருக்கும்.
1996-ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடங்கி, 2008 பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் வரை சாஃப்ட்பால் விளையாட்டு இடம் பெற்றிருந்தது. ஆனால் 2012, 2016களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அந்த விளையாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பெற்றுள்ள நிலையில், 2024 ஒலிம்பிக்கில் சாஃப்ட்பால் விளையாட்டு கிடையாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா என சந்தேகம் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாஃப்ட்பால் அணிதான், முதல்முறையாக ஜப்பானுக்குச் சென்றது. ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 6 நாடுகள் சாஃப்ட்பால் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் அனைத்திலும், கால்பந்து போட்டிதான் முதலில் நடத்தப்படும். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் அந்த வரலாற்றை மாற்றவிருக்கிறது. ஆம், டோக்கியோ ஒலிம்பிக்கில் சாஃப்ட்பால்தான் முதல் போட்டியாக நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AC6FqB
via IFTTT
0 Comments
Thanks for reading