பெண்களை கிரிக்கெட் பேட்டுடன் இணைத்து பேசிய விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்

தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி வர்ணனையின்போது வீரர்களின் பேட்டுடன் பெண்களை இணைத்து பேசியது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது கிரிக்கெட் வர்ணனையாளராக முதல் முறையாக களம் கண்டார் தினேஷ் கார்த்திக். அவருடைய வர்ணனை வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. ஆனால் இங்கிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவர் உதிர்த்த ஒரு கருத்துதான் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

image

அது "பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டை விரும்புவதில்லை. அடுத்தவரின் பேட்டைதான் அவர்களுக்குப் பிடிக்கும்… பேட் என்பது அடுத்தவரின் மனைவியைப் போல" எனக் கூறினார் தினேஷ் கார்த்திக். அவரின் இந்தப் பேச்சுக்கு கடுமையான கணடனங்கள் எழுந்தது. இதனையடுத்து இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் வர்ணனையின்போது தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் aகேட்டார்.

அப்போது "2-வது ஒருநாள் போட்டியின்போது நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை. ஆனால், அவ்வாறு பேசியது தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்காது. நான் இப்படி பேசியதற்காக என் மனைவியும், அம்மாவும் கடுமையாக சாடினார்கள்" என்றார் தினேஷ் கார்த்திக்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xirc1f
via IFTTT

Post a Comment

0 Comments