
யூரோ கோப்பை கால்பந்து தொடரில், பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
யூரோ கோப்பை கால்பந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லண்டன் வெம்பிலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. கோல் போடும் முயற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரம் காட்டியதால், பந்து இரு அணி வலைகளையும் சுற்றி வந்தது.

முதல்பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் விழாத நிலையில், 60-வது நிமிடத்தில் ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர்கள் பந்தை சரியாக கடத்தாததால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இத்தாலி வீரர் பெட்ரிகோ கியேஷா கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார். பதில் கோல் அடிக்க ஸ்பெயின் கடுமையாக போராடிய நிலையில், 80-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அல்பரோ மோராடா கோல் அடித்து ஆட்டத்தை சமன்படுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்திலும், கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடத்திலும் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்காததால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. முதலாவது, இத்தாலி வீரர் வாய்ப்பை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்த நிலையில், ஸ்பெயின் வீரர் தனது வாய்ப்பை கம்பத்துக்கு வெளியே அடித்தார்.

ஸ்பெயின் அணிக்காக கோல் அடித்து ஆட்டத்தை சமன்படுத்த உதவிய, அல்பரோ மோராடாவின் வாய்ப்பை இத்தாலி கோல் கீப்பர் டனரூமா தடுக்க, இத்தாலி ரசிகர்கள் கொண்டாடினர். இறுதியில் இத்தாலியின் ஜோரிங்கோ தனது வாய்ப்பை எளிதாக வலைக்குள் தள்ள, இத்தாலி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து டென்மார்க் இடையேயான 2-வது அரையிறுதியில் வெல்லும் அணியுடன், இத்தாலி இறுதிப்போட்டியில் மோதுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2THeg6K
via IFTTT
0 Comments
Thanks for reading