“ப்ரோமல், பேக்கர், கெர்லி”...ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க மும்மூர்த்திகள்!

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க அணியின் மும்மூர்த்திகளாக கலந்து கொள்ளவுள்ளனர் ப்ரோமல், பேக்கர் மற்றும் கெர்லி. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர்கள் தேர்வான விதம் இதுதான்...

2019-ஆம் ஆண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கம் வென்றார். பந்தய இலக்கை 9.76 நொடிகளில் எட்டி அவர் முதலிடம் பிடித்தார். அந்நாட்டை சேர்ந்த அனுபவ வீரரான ஜஸ்டின் காட்லின் 9.89 நொடிகளில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். 

தங்கப்பதக்கம் வென்ற கோல்மேனே ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனையை புறக்கணித்த காரணத்துக்காக 2 ஆண்டுகள் போட்டிகளில் கலந்து கொள்ள கிறிஸ்டியன் கோல்மேனுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை 18 மாதங்களாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கோல்மேனால் டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாக முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற நோவா லைலஸ் மீது எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று அமெரிக்காவில் நடைபெற்றது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 25 வயது ட்ரேவோன் ப்ரோமல் பந்தய இலக்கை 9.80 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தனர். ரோனி பேக்கர் , ப்ரட் கெர்லி ஆகியோர் அடுத்தடுத்து இடங்களை பிடிக்க, மூவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர். நோவா லைலஸ், கேட்லின் ஆகியோர் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தனர். இதனால் சர்வதேச தடகள ரசிகர்களின் பார்வை இப்போது ப்ரோமல் பக்கம் திரும்பியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dxJMe9
via IFTTT

Post a Comment

0 Comments