
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கிய டேவன் கான்வே தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் விளாசியுள்ளார்.
29 வயதான இடது கை பேட்ஸ்மேனான அவர் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். முதல் இன்னிங்ஸில் அவர் எதிர்கொண்ட 163வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் பதிவு செய்தார். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கி சதம் விளாசிய 12வது வீரர் கான்வே .
இதுவரை மூன்று ஒருநாள் மற்றும் பதினான்கு டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடி உள்ளார். அதில் அவரது பேட்டிங் சராசரி 63.45 ஆகும். இங்கிலாந்தின் அசத்தலான பந்து வீச்சை அனுபவ வீரர்கள் கேன் வில்லியம்சன், ராஸ் டைலர் மாதிரியான வீரர்களே திணற அதனை அசால்டாக ஹேண்டில் செய்தார் கான்வே.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pggJ3b
via IFTTT
0 Comments
Thanks for reading