
ஓய்வு அறிவிப்பு குறித்து தோனியிடம் கேட்பதற்கு நான் உள்பட எந்தவொரு வீரருக்கும் தைரியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
"இந்தியா டிவி" ஊடகத்துக்கு இது குறித்து பேட்டியளித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் "தோனி ஓய்வு அறிவித்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாங்கள் சென்னையில் 10-12 வீரர்கள்தான் இருந்திருப்போம். எனக்கு அப்போது தோனியின் முடிவு குறித்து எதுவும் தெரியாது. அவரிடம் கேட்கவும் நான் உள்பட எந்த வீரருக்கும் தைரியம் இல்லை. காரணம், நான் அப்போது புதுமுக வீரர். இரவு 7 மணி இருக்கும்போது நாங்கள் உணவருந்தச் சென்றோம். அப்போதுதான் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து இன்ஸ்டாகிராம் மூலம் தெரிந்துகொண்டேன்" என்றார்.

மேலும் பேசிய அவர் " உடனிருந்த யாருக்கும் இதுபற்றி தெரியாது. யாரும் இதுகுறித்து அப்போது பேசவில்லை. அவர் இனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்பதை அப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை உணர 2 நாட்கள் தேவைப்பட்டது" என்றார் ருதுராஜ் கெய்க்வாட். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது சிஎஸ்கே அணி பயிற்சிக்காக சென்னை வந்தது.
அப்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் இருந்தபடியே தோனி தன்னுடைய ஓய்வை இன்ஸ்டாவில் தெரிவித்தார். அப்போது சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதில் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்பு எந்தப் போட்டியிலும் தோனி பங்கேற்காத நிலையில் தன்னுடைய ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ciLbEF
via IFTTT
0 Comments
Thanks for reading