உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : விடாது பெய்த மழை... ரத்தான நான்காம் நாள் ஆட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் மழை பெய்து வரும் நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுமார் ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது ஐசிசி. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 92.1 ஓவருக்கு 217 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்துள்ளது அந்த அணி. கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் களத்தில் உள்ளனர். அந்த அணியின் தொடக்க வீரர் கான்வே 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தற்போது அந்த அணி இந்தியாவை விட 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

image

முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சில நேரம் தடைபட்டது. நான்காவது நாள் ஆட்டமும் தற்போது கைவிடப்பட்டுள்ளது. ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறும். முன்னதாக ஐசிசி வானிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் டே என ஆறாவது நாளை ஒதுக்கி வைத்துள்ளது. அதோடு சேர்த்து இந்த போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. 

இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இப்போதைக்கு மந்தமாக உள்ளது. நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் அதிரடியாக விளையாடி ரன் குவித்து. பின்னர் இந்தியாவை விளையாட சொல்லி பணித்து, அனைத்து விக்கெட்டுகளையும் துரிதமாக வீழ்த்தினால் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடியும். இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qcRVJW
via IFTTT

Post a Comment

0 Comments