குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் 30 வயதான இந்திய வீராங்கனை ராஹி சர்னோபத். 

இதன் மூலம் தற்போது நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை அவர் வென்றுள்ளார். 

தொடக்கம் முதலே இலக்கை குறி வைப்பதில் தவறாமல் இருந்த ராஹி சர்னோபத் பிரான்ஸ் மற்றும் ரஷ்ய வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் ஏழாவது இடம் பிடித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3diXJfO
via IFTTT