“நாதன் லயனை விட அஷ்வின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்” - இயான் சாப்பல் கருத்து

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் "ஆல் டைம் பெஸ்ட்" இல்லை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறிய கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சாப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய இயான் சாப்பல் "அஷ்வின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயனை விட அவர் சிறந்த வீரர் ஆவார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜோயல் கார்னர் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் அவர் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளாரா? என்னை பொறுத்தவரை அஷ்வின் சிறந்த பந்து வீச்சாளர்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பௌலராக இருப்பது சுலபமல்ல. இதனால் டாப் 5 டெஸ்ட் பௌலர்களை தேர்வு செய்வது எளிதான காரியம்தான். முதலாவதாக பாட் கம்மின்ஸை தேர்வு செய்ய விரும்புகிறேன். அற்புதமான பௌலர். கடந்த முறை இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்டின்போது சிறப்பாகப் பந்துவீசினார். தொடர்ந்து ஒருமணி நேரம் சரியான லென்த்தில் பவுன்சர் வீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். மற்ற பௌலர்களால் இதை சாத்தியப்படுத்த முடியுமா எனத் தெரியாது. நேரத்திற்குத் தகுந்து பந்துவீசும் ஆற்றல் பெற்றவர் கம்மின்ஸ்" என்றார் சாப்பல்.

தொடர்ந்து பேசிய அவர் "தென்னாபிரிக்க அணி வீரர் காகிசோ ரபாடாவும் டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இதில் இடம் கொடுக்கலாம். இஷாந்த் சர்மாவும், முகமது ஷமிக்கும் டாப் 5 டெஸ்ட் பௌலர்களில் இடமுண்டு. பந்துகளை நல்லமுறையில் ஸ்விங் செய்யக் கூடியவர்கள்" என்றார் இயான் சாப்பல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g0esGk
via IFTTT

Post a Comment

0 Comments