"இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டி குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை" - சுனில் கவாஸ்கர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கவாஸ்கர் " ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் மழை இருக்காது. நன்றாகவே வெயில் அடிக்கும். அதனால் ஆடுகளத்தில் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்து இருக்கும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சனும், பிராடும் கூட விக்கெட் எடுக்க சிரமப்படுவார்கள். அதனால் இங்கிலாந்துடனான டெஸ்ட் குறித்து கவலைப்பட தேவையில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்ற தோல்வியை இந்தியா மறக்க வேண்டும். இந்திய அணியில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தோல்வி இந்தியாவை எழுச்சிப் பெற செய்யும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கூட இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது" என்றார் சுனில் கவாஸ்கர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UM2mbW
via IFTTT

Post a Comment

0 Comments