
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராக முதல் முறையாக களமிறங்குகிறார்.
இது குறித்து "தி இந்து"வுக்கு பேட்டியளித்துள்ள அவர் " வர்ணனையாளராகும் வாய்ப்பு தானாக கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னால் வர்ணனையின்போது கிரிக்கெட் குறித்த தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் குறித்து பேச முடியும். இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளின் வீரர்களுடன் உள்ள அனுபவம் அதற்கு உதவும் என நினைக்கிறேன். அதனால் இரு அணி வீரர்களின் மன நிலையை என்னால் கணிக்க முடியும்" என்றார் தினேஷ் கார்த்திக்.

மேலும் பேசிய அவர் "இந்திய அணிக்காக விளையாடும் ஆசை இன்னமும் இருக்கிறது. டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நான் இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இப்போதுள்ள இந்திய அணிக்கு தேர்வாக வேண்டுமென்றால் வயது முக்கியமல்ல நல்ல உடற்தகுதியுடன் இருந்தாலே போதுமானது. ஏனென்றால் இது புதிய இந்தியாவின் காலக்கட்டத்தில் இருக்கிறோம்" என்றார் தினேஷ் கார்த்திக்.
36 வயதாகும் தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருாள் மற்றும் 32, டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 3176 ரன்களும் எடுத்துள்ளார். அதில் மொத்தம் 1 சதம் 16 அரை சதமும் அடங்கும். தமிழகத்தின் சென்னை மாநகரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இப்போது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியினன் போது தொலைக்காட்சி வர்ணனையாளராக களம் காண்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fN7UuE
via IFTTT
0 Comments
Thanks for reading