
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேச அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
அடுத்தாண்டு கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தகுதி சுற்றுப் போட்டியில் தர வரிசையில் 105-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணியும், 184-ஆவது இடத்தில் உள்ள வங்கதேசம் அணியும் மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில், 2ஆம் பாதியில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி போட்டியின் 79ஆவது மற்றும் 90ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3v6vBma
via IFTTT
0 Comments
Thanks for reading