அமீரகத்தில் ஐபிஎல் டி20: மொத்தம் 25 நாள்கள்; 4 நாள்களுக்கு 2 போட்டிகள்; திட்டம் தயார்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை 25 நாள்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் 4 நாள்களுக்கு ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள், 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

image

இதனையடுத்து இந்தப் போட்டிகள் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான திட்டப் பணிகளை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு கிரிக்கெட் சங்கத்திடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் 31 போட்டிகளை 25 நாள்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரே நாளில் இரண்டு போட்டிகளை 4 நாள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அமீரக சங்கமும் ஓகே தெரிவித்திருக்கிறது.

2020 ஐபிஎல் போல இந்த முறையும் அமீரகத்தில் இருக்கும் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருக்கும் மைதானங்களில் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக 3 மைதானங்களிலும் 30 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் ஐபிஎல் போட்டிகளுக்கான அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதியே தெரிய வரும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/34MLsM8
via IFTTT

Post a Comment

0 Comments