‘‘தோனியை களமிறக்க 10 நாட்கள் கங்குலியை சமாதானம் செய்யவேண்டியிருந்தது’’ - கிரண் மோர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களம் இறக்க கங்குலியை பத்து நாட்கள் வரை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் கிரண் மோர். 2002 முதல் 2006 வரையில் அவர் தேர்வு குழு தலைவராக பணியாற்றினார். அப்போது தான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தார். 

“கிரிக்கெட்டின் பார்மெட் கொஞ்சம் கொஞ்சமாக அப்போது மாறிக் கொண்டிருந்தது. அதனால் இந்திய அணிக்கு பவர் ஹிட்டிங் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டார். அதற்கான தேடலில் இருந்த போது தான் தோனி கண்ணில் பட்டார். அப்போது தோனியை 2003 - 04 துலிப் கோப்பை தொடரில் கிழக்கு மண்டல அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களம் இறக்குவதற்காக அப்போதையை கேப்டன் கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தோனி அதன் பிறகு இந்திய-ஏ அணிக்காக கென்யா சுற்றுப்பயணத்தில் விளையாடினார். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் வரலாறு” என தெரிவித்துள்ளார் கிரண் மோர். 

2003 - 04 துலிப் கோப்பையில் அதிக பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர் தோனி. அந்த சீசனில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 90.74. இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்க்ஸ் விளையாடி இருந்தார். அந்த சீசனின் இறுதி போட்டியில் தோனி விளையாடி இருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vIJrMP
via IFTTT

Post a Comment

0 Comments