"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் அசத்துவார்கள்" - மைக்கல் வாகன்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சில வீரர்கள் அசத்தலாக விளையாடுவார்கள் என பட்டியலிட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகமே இந்த டெஸ்ட் போட்டியை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தப் போட்டிக்கான விதிமுறைகளையும் ஐசிசி நேற்று அறிவித்தது.

image

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் " இந்தப் போட்டியில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் மிகச் சிறப்பாக விளையாடுவார். அவர் ஏற்கெவனவே டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். அடுத்து ரிஷப் பன்ட். அவர் இப்போது கிரிக்கெட் உலகின் நட்சத்திரமாக மிண்ணுகிறார். கடந்த சில மாதமாக அவரின் ஆட்டம் பிரமாதம்" என்றார்.

மேலும் "அதுவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அனைவரையும் அசத்தினார் ரிஷப் பன்ட். அதேபோல நியூசிலாந்தின் பேட்ஸ்மேன் வாட்லிங்கும் மிக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். நான் குறிப்பிட்டுள்ள இந்த மூன்று வீரர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்" என்றார் மைக்கல் வாகன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uA2N5c
via IFTTT

Post a Comment

0 Comments