
தான் இன்னும் சிங்கிளாகதான் இருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஷூப்மன் கில்லும், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகளான சாராவும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெகு காலமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார் ஷூப்மன் கில்.

அதில் "நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். என்னைப்போன்று இருக்கும் குளோனிங் நபரை உருவாக்கும் எண்ணம் எதிர்காலத்தில் இல்லை" என வேடிக்கையாக பதிலளித்திருக்கிறார் ஷுப்மன் கில். இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஷுப்மன் கில் கொரோனா தடுப்பு முறைக்காக மும்பையில் இருக்கும் ஹோட்டலில் இப்போது தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3p286t8
via IFTTT
0 Comments
Thanks for reading