
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை எளிதில் வென்று தங்கப்பதக்க்ததை தட்டிச்சென்றார்.

51 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தானின் நஸிம் கைஜாபாயிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் நூலிழையில் தங்கத்தை தவறவிட்டார் மேரி கோம்.
64 கிலோ பிரிவில் இந்தியாவின் லால்பாட் சாய்ஷி 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் மிலனா சப்ரோனோவாவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.3½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3p3r0zM
via IFTTT
0 Comments
Thanks for reading