“கொரோனா உறுதியானால் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை மறந்து விடுங்கள்!” - பிசிசிஐ எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உட்பட ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அந்த பரிசோதனையில் வீரர்கள் யாருக்கேனும் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானால் இங்கிலாந்து தொடரை சம்பந்தப்பட்ட வீரர் மறந்து விட வேண்டியதுதான் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை எச்சரித்துள்ளது. 

பாதுக்காக்கப்பட்ட பயோ பபிளில் வீரர்கள் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டி உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய அணி ஜூன் 2 ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக 8 நாட்கள் மும்பையில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் பபுளில் வைக்கப்பட உள்ளனர். அதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானால் அந்த வீரரை அணி நிர்வாகம் இங்கிலாந்து அழைத்து செல்லாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதனால் வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு  பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் வீரர்களின் குடும்பத்தினரையும் இங்கிலாந்து தொடருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வீரர்களை போலவே அவர்களது குடும்பத்தினரும் பயோ பபுளில் மட்டுமே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vUPiOG
via IFTTT

Post a Comment

0 Comments