
“பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்தியாவின் சீனியர் வீரர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் என்ன செய்வது என தெரிவித்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தோம்” என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “பயணங்கள்தான் சவாலானதாக இருந்தது. அந்த நேரத்தில்தான் இந்திய வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால் இழப்புகளும் இருந்தது. அது சில கவனச் சிதறலை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்திய ரசிகர்களுக்காக இந்தியா நடத்துகின்ற தொடர் என்பதால் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடுவதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.
ஐபிஎல் தொடர் பயோ செக்யூர் பபுளில் நடைபெற்றும், வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uzg9Q2
via IFTTT
0 Comments
Thanks for reading