
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் போலீஸ் காவலை 4 நாள்கள் நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.
மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் சுஷில் குமார்.
இந்நிலையில் சுஷில் குமாரின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைவதையொட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேலும் 7 நாள்கள் போலீஸ் காவல் நீட்டிப்புக்கு அனுமதி கேட்டு டெல்லி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் 4 நாள்கள் சுஷில குமாரை விசாரிக்க போலீஸ் காவலுக்கு அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக சுஷில் குமார் மீதான கொலைக் குற்ற விசாரணை தொடர்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fyTxtK
via IFTTT
0 Comments
Thanks for reading