முறையான கொரோனா சான்றிதழ் இல்லை: திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்

பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அபுதாபி செல்வதற்கு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள், நிர்வாகிகள் விமான நிலையம் சென்ற நிலையில் முறையான கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதுபோல பாகிஸ்தானிலும் அதே பாணியில் 2016 ஆம் ஆண்டு முதல் 6 அணிகள் பங்கேற்கும் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் தொடர் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

image

இதில் கலந்துகொள்ளவிருந்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் வீரர்கள் கராச்சியில் தனிமை முகாமில் இருந்தனர். மற்ற அணி வீரர்களும் வெவ்வேறு விடுதிகளில் இருந்தார்கள். அதில் யாருக்கும் தொற்று உறுதியாகாத பட்சத்தில் விமானம் மூலம் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிமை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பரிசோதனையிலும் யாருக்கும் தொற்று உறுதியாகாததால் வீரர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவரும் அபுதாபி செல்ல தோஹா விமான நிலையத்திற்கு சென்றனர்.

ஆனால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட 10 வீரர்கள் நிர்வாகிகளிடம் கொரோனா இல்லை என்ற முறையான சான்றிதழ் இல்லாத காரணத்தினால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. வீரர்கள் எவ்வளவு முறையிட்டும் அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். மொத்தம் 5 வீரர்களிடம் மட்டுமே கொரோனா இல்லை என்பதற்கான சரியாகச் சான்றிதழ் இருந்ததால் அவர்கள் அபுதாபி புறப்பட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2SJhWnL
via IFTTT

Post a Comment

0 Comments