இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் நிறுத்தப்பட காரணமே பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தான். தொற்று உறுதியான நான்கு வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவும் ஒருவர். அவர் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் ஒன்றில் தொற்று இல்லை என்றும், மற்றொரு சோதனையில் பாதிப்பு உள்ளது என்றும் ரிப்போர்ட் வந்துள்ளது.

அதனால் தொடர்ந்து சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எனது குவாரண்டைன் நாட்கள் இன்னும் முடியவில்லை. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஒன்றில் பாசிட்டிவ், மற்றொன்றில் நெகட்டிவ் என்றும் வந்துள்ளது. மற்றபடி நான் நன்றாக உள்ளேன். எந்தவொரு தவறான தகவலையும் யாரும் எதுவும் தெரியாமல் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uNMAdL
via IFTTT

Post a Comment

0 Comments