“ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியால் செய்ய முடியாததை இந்தியா செய்துள்ளது!” - இன்சமாம்-உல்-ஹாக்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வந்த போது செய்ய முடியாததை இந்தியா இப்போது செய்து வருகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக். இந்தியாவிடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட எப்போதுமே ஒரு ஐம்பது வீரர்கள் தயாராக உள்ளனர் என தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

“வலுவான ஒரு அணி இருக்க அதே பலத்துடன் கூடிய மற்றொரு அணியை உருவாக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ள யோசனை சுவாரஸ்யமான ஒன்று. இந்தியா இன்று செய்து வரும் முயற்சியை ஆஸ்திரேலியா அணி 1990 மற்றும் 2000 வாக்கில் செய்திருந்தது. இருப்பினும் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. 

ஆனால் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாளும் என தெரிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இரண்டுமே தேசிய அணிகள்” என தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார் இன்சமாம். 

image

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் வரும் ஜூலை மாதம் இந்தியா விளையாடுகிறது. கோலி, ரோகித், ஜடேஜா, பும்ரா மாதிரியான பிரதான வீரர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர். இளம் வீரர்கள் அடங்கிய அணி இலங்கைக்கு பயணிக்க உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3f4CtvD
via IFTTT

Post a Comment

0 Comments