
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் 2010-இல் சூதாட்ட புகாரில் சிக்கியது நன்றாக நினைவிருக்கும் என கருதுகிறேன் என சொல்லி இருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். அவரது கருத்தை சல்மான் பட் விமர்சித்திருந்த சூழலில் அதற்கு வாகன் பதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சல்மான் பட்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
என்ன நடந்தது?
“இந்திய கேப்டன் கோலியை விட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சிறந்த கிரிக்கெட் வீரர். இருந்தாலும் கோலிக்கு இருப்பதுபோல வில்லியம்சனுக்கு சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இல்லை” என பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார் வாகன். அதனை விமர்சித்ததோடு கோலிக்கு ஆதரவாக பேசி இருந்தார் பட்.

இந்நிலையில் “இதன் தலைப்பு என்னவென்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது. பட் என்னை குறித்து ஏதோ சொல்லியுள்ளார். அது அவருடைய கருத்து. அதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் 2010இல் சூதாட்ட புகாரில் சிக்கியது சல்மான் பட்டுக்கு நன்றாக நினைவிருக்கும்” என சொல்லி இருந்தார் வாகன். இதற்கு தான் பட் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

“அவர் தேர்ந்தெடுத்த தலைப்பு தவறானது. அதை தான் சுட்டி காட்டினேன். சிலருக்கு மூளையிலும் சிக்கல் இருக்கலாம். அதனால் அவர்கள் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கலாம். கோலி, வில்லியம்சன் இருவரும் சிறந்த வீரர்கள்தான். குறைந்தபட்சம் புள்ளிவிவரங்களை வெளியிட்டாவது அவர் ஒப்பிட்டு பேசி இருக்கலாம். அதன் மூலமும் நாமும் ஏதேனும் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் வெறுமனே பேசி விட்டார். இப்படி பேசுவது மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது” என பட் சொல்லி உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ykrmXc
via IFTTT
0 Comments
Thanks for reading