Battlegrounds Mobile India : பப்ஜி மொபைல் கேம் இந்திய வெர்ஷனுக்கான முன்பதிவு துவங்கியது!

தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்துள்ளது. இது இந்தியாவின் பப்ஜி மொபைல் கேம் வெர்ஷன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த மொபைல் கேமுக்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகி உள்ளது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இந்த கேமை பயன்படுத்தும் வகையில் அதற்கான முன்பதிவை KRAFTON நிறுவனம் பிளே ஸ்டோரில் தொடங்கி உள்ளது. 

இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த செப்டம்பரில் தடை விதித்தது அரசு. அதில் மல்டி பிளேயர் மொபைல் கேம் அப்ளிகேஷனான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது. 

பிளே ஸ்டோரில் BATTLEGROUNDS MOBILE INDIA என்ற அப்ளிகேஷனை Pre-register பட்டனை செலக்ட் செய்வதன் மூலம் இந்த அப்ளிகேஷன் இந்தியாவில் வெளியாகும் போது நோட்டிபிகேஷன் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அப்ளிகேஷன் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்ற அறிவிப்பை எதையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 

அதே போல ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கான முன்பதிவு ஆரம்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33PXdAZ
via IFTTT

Post a Comment

0 Comments