“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றும்”- ராகுல் டிராவிட் கணிப்பு

இங்கிலாந்து மண்ணில் அந்த நாட்டுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரை இந்தியா 3 - 2 என கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக வரும் ஜூன் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில் ராகுல் டிராவிட் இதனை தெரிவித்துள்ளார். 

“இந்தியாவுக்கு இந்த முறை தொடரை வெல்வதற்கான நல்ல வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன். இங்கிலாந்து அணி வலுவான பவுலிங் படையை கொண்டுள்ளது. நிச்சயம் சிறப்பாக அவர்கள் பந்து வீசுவார்கள். இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை கேப்டன் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் வலு சேர்க்கிறார்கள். மறுபக்கம் இந்திய அணிக்கு பலமே அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பது தான். பேட்டிங் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அதனால் இந்தியா 3 - 2 என ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும்” என அவர் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரையிலான நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. டிரெண்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஹெட்டிங்லி, கென்னிங்டன் ஓவல் மற்றும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானங்களில் இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QaWg2Y
via IFTTT

Post a Comment

0 Comments