ஜுவென்டஸ் அணிக்காக தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

இத்தாலியின் கால்பந்தாட்ட அணிகள் கலந்து கட்டி விளையாடும் சீரீ A லீகில் ஜுவென்டஸ் அணிக்காக தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார் ‘கோல் மன்னர்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ. மாடர்ன் டே கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்படுபவர் அவர். 

Sassuolo அணிக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 100 கோல் அடித்த வீரராகி உள்ளார் ரொனால்டோ. அதோடு மூன்று நாடுகளை சேர்ந்த மூன்று வெவ்வேறு கிளப்புகளுக்கு 100 கோல் அடித்துள்ளார் அவர். இதற்கு முன்னதாக லா லீகா (ரியல் மேட்ரிட்) மற்றும் பிரீமியர் லீக் (மான்செஸ்டர் யுனைடெட்) அணிகளுக்காக அவர் 100+ கோல்களை அடித்துள்ளார். தனது தாய்நாடான போர்சுகீஸ் அணிக்காகவும் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 100க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்துள்ளார். 

ஜுவென்டஸ் அணிக்காக தனது 131வது ஆட்டத்தில் 100வது கோலை ரொனால்டோ அடித்திருந்தார். இந்த ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி 3 - 1 என கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3w0HLOm
via IFTTT

Post a Comment

0 Comments