RCB Analysis: கோலியின் முதல் முடிவே தவறானதா... இந்த முறையாவது பந்தயம் அடிக்குமா பெங்களூரு?!

இந்த ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியையே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடப்போகிறது ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த சீசனில் ஆடிய பல வீரர்களைக் கழட்டிவிட்டு வழக்கம்போல் பல புதிய வீரர்களுடன் களம் காண்கிறது அந்த அணி. மேக்ஸ்வெல், கைல் ஜேமீசன் போன்ற வீரர்களைக் கோடிகள் கொட்டி வாங்கியிருக்கிறது பெங்களூரு அணி. எதிர்பார்த்த அளவுக்கு அவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டி-20 போட்டியில் ஓப்பனராக ஆடிய கோலி, ஐ.பி.எல் தொடரில் தொடக்க வீரராகவே இறங்கபோவதாகக் கூறியிருக்கிறார். அது எந்த வகையில் பெங்களூரு அணிக்குக் கைகொடுக்கும்? வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அந்த அணியை இம்முடிவு பலப்படுத்தியது இல்லை.

எப்போதும் டி வில்லியர்ஸ் முன்னரே இறங்கவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால், அவர் சீக்கிரம் வருவதால் ஆர்.சி.பி பிரச்னைகள் சந்திக்கக்கூடும். ஏனெனில், அவர்கள் மிடில் ஆர்டர் அப்படி. போதாக்குறைக்கு குர்கீரத், ஷிவம் தூபே ஆகியோரையும் விடுவித்திருக்கிறார்கள். ஒரு டி-20 அணியில் ஐந்தாவது பேட்டிங் ஸ்லாட் ஏன் முக்கியம்? டி வில்லியர்ஸ் ஏன் அந்த இடத்தில் விளையாடவேண்டும்?

வழக்கமாக பெங்களூரு அணியின் பிரச்னையாக இருப்பது பந்துவீச்சுதான். இம்முறை அதை அவர்கள் சரிசெய்திருக்கிறார்களா! ஜேமீசன், கேன் ரிச்சர்ட்சன் போன்றவர்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? டெத் ஓவர்களில் அவர்களால் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆர்.சி.பி-யை துரத்திக்கொண்டே இருக்கும் கேள்விகளுக்கு இம்முறை பதில்கள் கிடைத்திருக்கிறதா!

டி வில்லியர்ஸ் ஐந்தாவது வீரராக வரவேண்டும். மேக்ஸ்வெல் எங்கே களம் காணவேண்டும்? நான்காவது வெளிநாட்டு வீரர் யார்? uncapped இந்திய பேட்ஸ்மேன் யார் ஆடவேண்டும்? பிளேயிங் லெவன், பேட்டிங் ஆர்டர் என முழுமையாக இந்த வீடியோவில் அலசியிருக்கிறோம்!



from விகடன் https://ift.tt/3dICVxD
via IFTTT

Post a Comment

0 Comments