CSK vs PBKS: டாஸ் வென்ற தோனி பந்துவீச முடிவு!

நடப்பு ஐபிஎல் சீசனின் எட்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்கிறது. 

இரு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன்னதாக தலா ஒரு போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் பஞ்சாப், ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. சென்னை அணி டெல்லியிடம் தோல்வியை தழுவி இருந்தது.  ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் 23 முறை நேருக்கு மோதி உள்ளன். அதில் சென்னை அணி 14 வெற்றிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் 9 வெற்றிகளை பெற்றுள்ளது. 

இரு அணிகளும் ஆடும் லெவனில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் சென்னை அணி வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Q0Ybak
via IFTTT

Post a Comment

0 Comments