
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி. அதனால் தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள மேக்ஸ்வெல் 176 ரன்களை குவித்துள்ளார். அவரது ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் வாகன் இதனை தெரிவித்துள்ளார்.
“கடந்த சீசன்களில் சரிவர ஆட தவறி இருந்தாலும் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி. அதனால் தான் அவர் சிறப்பான ஆட்டத்தை நடப்பு சீசனில் வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு காரணம் பெங்களூரு அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளனர். அதனால் மேக்ஸ்வெல் மீது அதிக கவனமும், எதிர்பார்ப்பும் இல்லை. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேக்ஸ்வெல் திறம்பட விளையாடி வருகிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் இதற்கு முன்னதாக ஐபிஎல் அரங்கில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளில் விளையாடி உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ed3ECH
via IFTTT
0 Comments
Thanks for reading