டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர்களில் கிறிஸ் மோரிஸின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார்.
ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணி சார்பில் கடைசி ஓவரை டாம் குர்ரன் வீசினார். கிரிஸ் மோரிஸ் எதிர் கொண்ட முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதனால் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்து அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். மோரிஸ் 18 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mOnUi4
via IFTTT
0 Comments
Thanks for reading