மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் யார்? - பட்டியலில் புவனேஸ்வர் குமார்!

மாதம் தோறும் சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் விளையாட்டில் அற்பணிக்கும் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி. அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரையில் ஆடவர் கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த இந்தியாவின் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பெயரும் உள்ளது. 

அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் வேட்டை நிகழ்த்தி காட்டினார் அவர். ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளும், டி20 தொடரில் 4 விக்கெட்டுகளும் அவர் வீழ்த்தி இருந்தார். அது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. 

அதே போலா ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஸீன் வில்லியம்ஸும் இடம் பிடித்துள்ளனர். மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ராவத் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் Lizelle Lee இடம் பிடித்துள்ளனர். 

இந்த விருதை பிப்ரவரி மாதம் அஷ்வினும், ஜனவரி மாதம் ரிஷப் பண்டும் வென்றிருந்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uvxh8U
via IFTTT

Post a Comment

0 Comments