வெற்றி நடை போடும் பெங்களூரு அணிக்கு 'பிரேக்' போடுமா சிஎஸ்கே?

ஐபிஎல் தொடரில் இன்று 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது பெங்களூரு. சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் 3 இல் வெற்றிப்பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னை முதல் போட்டியில் டெல்லியுடன் தோற்றாலும் அடுத்தடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.

image

சிஎஸ்கேவை பொறுத்தவரை அதன் பேட்டிங் மிக வலுவாக இருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு என வலுவாகவே இருக்கிறது. கேப்டன் தோனியும் முழுமையான பார்முக்கு திரும்பினால் அணி இன்னும் அசத்தலாக இருக்கும். அதேபோல பவுலிங்கில் தீபக் சஹார், லுங்கி நிகிடி, சாம் கரன் ஆகியோர் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள். ஏனோ, ஷர்துல் தாக்கூர் மட்டும் பந்துவீச்சில் திணறுகிறார்,

image

பெங்களூரு அணியில் கோலி, தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் பிரமாதமான பார்முக்கு திரும்பி எதிரணியினரை அச்சுறுத்துகின்றனர். அதேபோல ஆல் ரவுண்டர்களில் வாஷிங்டன் சுந்தரும் அசத்துகிறார். பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல் நம்பிக்கையளிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாமிசன் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் கோலி அவரை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார்.

image

ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 9-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே பெறாமல் வெற்றிநடை போடும் பெங்களூருக்கு, அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே தோல்வியை பரிசாக கொடுக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sQk0GA
via IFTTT

Post a Comment

0 Comments