மேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த சேவாக்!

நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல். மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாக 176 ரன்களை குவித்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் முன்னாள் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் மன ஓட்டம் இப்படித்தான் இருக்கும் என சொல்லும்விதமாக ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். 

image

“ஒரு வழியாக மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல் சீசனில் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது நன்மையே. அது எப்படி உள்ளது என்றால், மேக்ஸ்வெல் தனது முந்தைய அணி உரிமையாளர்களை பார்த்து வெள்ளந்தியாக சிரிப்பதுபோல் உள்ளது” என கேப்ஷன் கொடுத்துள்ளார். 

டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்காக இதற்கு முன்னதாக ஐபிஎல் அரங்கில் மேக்ஸ்வெல் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை பெங்களூரு அணியின் கேப்டன் கோலியும் புகழ்ந்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mV4BDO
via IFTTT

Post a Comment

0 Comments