ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்களான கேன் ரிச்சர்ட்சனும், ஆடம் ஜாம்பாவும் ஐபிஎல் தொடரில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 8 அணிகளும் சென்னை, மும்பை மைதானத்தில் விளையாடின. அடுத்தக்கட்டமாக அகமதாபாத், டெல்லியில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்றுள்ளது. மொத்தம் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனும், சுழற்பந்துவீச்சாளருமான ஆடம் ஜாம்பாவும் இருக்கிறார்கள். இதில் கேன் ரிச்சர்ட்சன் ஒரு போட்டியில் விளையாடினார், ஆடம் ஜாம்பா இதுவரை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Official Announcment:
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 26, 2021
Adam Zampa & Kane Richardson are returning to Australia for personal reasons and will be unavailable for the remainder of #IPL2021. Royal Challengers Bangalore management respects their decision and offers them complete support.#PlayBold #WeAreChallengers pic.twitter.com/NfzIOW5Pwl
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் "ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகின்றனர். இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடமாட்டார்கள். அவர்களின் முடிவுக்கு ஆர்சிபி நிர்வாகம் முழு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3njb6Ay
via IFTTT
0 Comments
Thanks for reading