
மிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது? என்று கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா.
ஐபிஎல் 2021 தொடரில் மூன்று போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடர் தோல்விகளை தழுவி உள்ளது. அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருகிறது. நேற்று மும்பைக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஐந்து விக்கெட்களை வெறும் 8 ரன்களுக்கு இழந்து, மீண்டுமொரு முறை தன் மிடில்-ஆர்டர் ஓட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ஹைதராபாத் அணி. வார்னர் அவுட் ஆன பின் அந்த அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்க நல்ல வீரர்கள் யாருமே இல்லை.
சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்பட்டு, கடந்த ஏலத்தில் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவை சன்ரைசர்ஸ் அணி பயன்படுத்தவில்லை என்பது தெரியவில்லை. ஜாதவ் சர்வதேச அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை களமிறக்கி பரிசோதிக்க வேண்டும். கடந்த ஐபிஎல் தொடர்தான் ஜாதவுக்கு மோசமாக அமைந்தது, மற்றவகையில் இந்திய அணியிலும், சிஎஸ்கே அணியிலும் ஓரளவுக்கு சிறப்பாகவே விளையாடியவர் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இந்நிலையில் கேதார் ஜாதவுக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிரக்யான் ஓஜாவும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஓஜா கூறுகையில், ‘’கேதார் ஜாதவுக்கு சென்னையில் விளையாடிய அனுபவம் உண்டு. அவர் தனது சொந்த இடமாக இருந்த சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். அவர் நிறைய பயிற்சி செய்துள்ளார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒரு தரமான வீரர் என்பதை நிருபிப்பார்.
மிடில்-ஆர்டர் நிலை மோசமாக உள்ளது என்பதை நீங்கள் காணும்போது கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது? அவருக்கு மிடில்-ஆர்டர் அனுபவம் உள்ளது’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3glBYhU
via IFTTT
0 Comments
Thanks for reading