”அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது” - பஞ்சாப் அணியின் தமிழக வீரர் ஷாருக்கான்!

தமிழகத்தை சேர்ந்த 25 வயதான இளம் வீரர் ஷாருக் கான் நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரை கடந்த பிப்ரவரியில் நடந்த மினி ஏலத்தில் பஞ்சாப் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. அதிரடி பேட்ஸ்மேனான அவர் தனக்கு பொல்லார்டை நினைவு படுத்துவதாக தெரிவித்துள்ளார் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே. 

“அற்புதமான வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்ற அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. நான் பஞ்சாப் அணியுடன் செலவிடுகின்ற ஒவ்வொரு நிமிடமும் உன்னதமான தருணம். நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். என்னை ஏலத்தில் எடுத்த போது நான் பயிற்சியில் இருந்தேன். அப்போது எனது பயிற்சியாளரிடம் சொல்லி இருந்தேன். என் பெயர் வந்தால் கூப்பிடுங்கள் என்று. நான் பயிற்சி முடித்து பேருந்தில் பயணித்த போது தான் எனது பெயர் ஏலத்தில் வந்தது. அதை நானும் பார்த்தேன். நிச்சயம் அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்” என ஷாருக் கான் தெரிவித்துள்ளார். 

அண்மையில் முடிந்த சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் 220.0 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடம் பிடித்தார் ஷாருக் கான். அதானால் தான் பல்வேறு ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தனர். இறுதியில் பஞ்சாப் அவரை வாங்கியது. 

தமிழக வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்துவது வழக்கம். அஷ்வின் தொடங்கி கடந்த சீசனில் நடராஜன் மற்றும் வருண் சக்கரவர்த்தி வரை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக ஷாருக் ஒரு கலக்கு கலக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3to9yaN
via IFTTT

Post a Comment

0 Comments