ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ, கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்காக ஆக்ஸிஜன் வாங்க 41 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு கொரோனா நிதியுதவி அளித்திருந்தார். அவரை தொடர்ந்து பிரட் லீயும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
“இந்தியா எனது இரண்டாவது வீடு. நான் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடி போதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட இந்திய மக்கள் என் மீது செலுத்துக்கின்ற அன்புக்கும், பாசத்திற்கும் எல்லையே இல்லை. அதனால் இந்திய மக்களுக்கு என்றென்றும் என் நெஞ்சத்தில் இடம் உள்ளது. இந்தியாவை தற்போது சூழ்ந்துள்ள கொரோனா பிடியின் இறுக்கம் என்னை வாட்டமடைய செய்துள்ளது.
அதனால், இந்திய மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வாங்க cryptorelief-க்கு இந்த நிதியை அளிக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாம் எல்லோரும் உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுடன் போராடும் முன்கள பணியாளர்களுக்கு எனது நன்றி.
Well done @patcummins30 ?? pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தேவையிருந்தால் மட்டும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியில் வரவும். இந்த முயற்சியை முன்னெடுத்த பேட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3gN3swX
via IFTTT
0 Comments
Thanks for reading